“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின் கீழ் ரூபாய் 40,000/-

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின் கீழ் ரூபாய் 40,000/-

03.06.2026

கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் முதலாம் பிரிவில் வாழ்ந்த திருமதி சந்தனப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் புதல்வரான வடிவேல் (புனைப்பெயர்: கரந்தவன்) அவர்கள் மாவீரர்

இந்நிலையில், வடிவேல் அவர்களின் மூத்த சகோதரி அண்மையில் புற்றுநோய் காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதன் விளைவாக, அவரது இரண்டு பிள்ளைகளும் பெற்றோர் ஆதரவின்றி தங்களது அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் எதிர்கால நல்வாழ்வையும் கல்வி முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின் கீழ் ரூபாய் 40,000/- (நாற்பதாயிரம்) நிதியுதவி அவர்களது அம்மம்மாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிதியுதவி வழங்கிய ஜெர்மனியில் வாழும் உறவுகளுக்கும் நன்கொடையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், குழந்தைகளின் கல்வியும் நலனும் சிறப்பாக அமைய அனைவரின் ஆதரவும் ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளப்படுகின்றது.

உதவும் இதயங்கள் நிறுவனம் – ஜெர்மனி

பகிருங்கள்: