உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாக மிகவும் பாதிக்கப்பட்ட புத்துவெட்டுவான் கிராமத்தைச்சேர்ந்த 70 குடும்பங்களுக்கு Helping Hearts Germanay
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாக மிகவும் பாதிக்கப்பட்ட புத்துவெட்டுவான் கிராமத்தைச்சேர்ந்த 70 குடும்பங்களுக்கு தமிழ் மன்றம் பிறைபேர்க் நிதி அனுசரணையுடன் அனர்த்த நிவாரண உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழ் மன்றம் பிறைபேர்க் அங்கத்தவர்கள் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் தாயக உறவுகள் சார்பாகவும் எமது நிர்வாகம் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.பிறைபேர்க் மக்கள் தாயக உறவுகளிற்கு பலவிதமான உதவிகளை செய்து வருவதும் இளைஞர்கள் மத்தியில் தாயக உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதும் வரவேற்ககூடியதாகவும் வாழ்த்தக்கூடியதாகவும் உள்ளது. அந்தவகையில் தமிழ் மன்றம் பிறைபேர்க் நிர்வாகத்தின் தலைவர் செல்வன் A .சரவணன் அவர்கள் எம்மோடு தொடர்வுகொண்டு 1250 யூரோக்களை அனுப்பிவைத்துள்ளார். இவ் உதவி முதற்கட்டமாக வழங்கப்பட்டது.அடுத்தகட்ட உதவி வழங்கியதும் அறியத்தருகின்றோம் நன்றி "உதவும் இதயங்கள் நிறுவனம்" germany
பகிருங்கள்: