நூற்று அறுபத்து மூன்று (163) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் Helping Hearts Germanay

நூற்று அறுபத்து மூன்று (163) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் Helping Hearts Germanay

உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாக அனர்தத்தாலும் போரினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட மு/மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தைச் சேர்ந்த நூற்று அறுபத்து மூன்று (163) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய திரு பிரதீபன் அவர்களை நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ் பாடசாலை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்ட்டவர்கள் அவர்களுக்கு இவ் உதவியை வழங்குங்கள் என்று கேட்டதற்கு இணங்க . தமிழ் மன்றம் பிறைபேர்க் நிதி அனுசரணையுடன் 2 கட்டமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் கால் கோள் விழாவையும் மகிழ்வித்து சிறப்பித்திருந்தனர். அந்த வகையில் தமிழ் மன்றம் பிறைபேர்க் அங்கத்தவர்கள் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் தாயக உறவுகள் சார்பாகவும் எமது நிர்வாகம் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் மனித நேயப் பணிபுரியும் தமிழ் மன்றம் பிறைபேர்க் நிர்வாகக்குழுவினரையும் மக்களையும் மனதார வாழ்த்துகின்றோம் அத்துடன் நேரத்தையும் பாராது இவ் நிகழ்விற்கு வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய திரு பிரதீபன் அவர்களுக்கும் மற்றும் கிராம சேவகர் திருமதி டிலோஜினி அவர்களுக்கும் எமது மனித நேய செயற்பாட்டாளர்களுக்கும் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம் "உதவும் இதயங்கள் நிறுவனம்" Germany  
பகிருங்கள்: