HelpingHeartsTamil

🌷“60 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்”🌷🎂
கையில்புறோன் நகரில் வசிக்கும் செல்வமணி றஞ்சிதகுமார் அவர்களின் 60 வது பிறந்த நாளை 12.01 .2019 அன்று தங்கள் இல்லத்தில் பிள்ளைகள் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள் அதே போன்று தாயகத்திலும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவி செய்து மகிழ்விக்க விரும்பி எமது அன்புக்குரிய செட்டியாண்ணா ஊடாக 220 யூரோக்களை எமக்கு அனுப்பியிருந்தார் மகள் பிரியங்கா அவர்களின் விருப்பப்படி ஊற்றங்கரை தண்ணீரூற்று முள்ளியவளையைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது அண்ணாவுடன் வாழும் முன்னாள் போராளி செல்வி க.வாசுகி அவர்களுக்கும் வாழ்வாதாரமாக தையல் இயந்திரம் ஒன்றும் , இளங்கோபுரம் தேராவில் புதுக்குடியிருப்பு மாவீரர் குடும்பம் அத்துடன் கணவனும் போரில் இறந்து விட்டார் பெண்கள் தலைமைத்துவம் கொண்ட ரெ.புஸ்வரனி அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் தையல் இயந்திரத்தை திருத்துவதற்கு 9.000 ரூபாவும் வாழ்வாதாரமாக தையல் இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.60 வது பிறந்த நாளை கொண்டாடும் செல்வமணி றஞ்சிதகுமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் றஞ்சிதகுமார் பிரியங்கா அவர்கள் இவ் உதவியை வழங்கியதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.அத்துடன் புலத்தில் பிறந்து வளர்ந்தாலும் தாய் நாட்டையும் மக்களையும் மறக்காமல் வாழும் பிள்ளைகள் எம் இனத்தின் முகவரிகள் என்று கூறலாம் .வாழ்த்துக்கள் பிரியங்கா!. இவர்களை இனம் கண்டு நேரடியாக சென்று உதவியை வழங்கிய மாவட்ட உடல் நல மருத்துவர் Dr. திரு கனகசிங்கம் மற்றும் திருமதி பத்மா ,திருமதி மாலா செல்வன் கிசோபன் அவர்களுக்கும் நன்றி “உதவும் இதயங்கள் நிறுவனம்” Germany
தொடர்வுகளுக்கு:helpinghearts2013@gmail.com

Leave A Reply