ஜேர்மனியில் இயங்கும் உதவும் இதயங்கள் நிறுவனத்தினால் போக்கட்டி அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 25/1/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயற்பாட்டாளர் ப.கிசோபன் வே.தனுசன் அமைப்பின்
தென்மராட்சி இணைப்பாளர் திருமதி சி.தவமலர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்
கலந்து கொண்டனர்
தென்மராட்சிக் கல்வி வலயத்தின் கொடிகாமம் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கஸ்ரப் பிரதேசத்தில் இயங்கும் போக்கட்டி அ.த.க பாடசாலையில் தரம் 1 – 5 வரை கல்வி கற்கும் 96 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் கேட்டவுடன் இந்த உதவியை வழங்குவதற்கு அனுமதி வழங்கிய நிறுவுனர் ஸ்ரீரஞ்சன் அவர்களுக்கும் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கிய செயற்பாட்டாளர் ப.கிசோபன் மற்றும் பணியாளர் வே.தனுசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின் றோம்.( உதயன் பத்திரிகை) Reporter









































