HelpingHeartsTamil

அன்பான உறவுகளே!
உதவும் இதயங்கள் நிறுவனம் தாயகப் பிரதேசங்களில்
“கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்”!! என்ற நல்ல எண்ணத்துடன் பின்தங்கிய கிராமங்களில்
இலவச மாலை நேரக்கல்வி நிலையங்கள்.
அறநெறி வகுப்புக்கள்.
ஆரம்பக் கல்விநிலையங்கள்.
பின்தங்கிய கிராமங்களில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின்
மகளிர் கிராமிய முற்போக்கு ஒன்றியம் 20 கிராமங்களில் உருவாக் கியுள்ளளோம். இதில் 3 கிராமங்களில் வேறு ஒரு அமைப்பு தலையிட்டதால் குழப்ப நிலையில் உள்ளது.
மாங்குளத்தில் ஒருங்கிணைந்த பண்ணை ஒன்று 5 ஏக்கர் காணியில் அமைத்து மெல்லன உருவாக்கி வருகின்றோம்.
அத்தோடு எமது உறவுகளின் கோரிக்கைக்கமைய சிறுவர் இல்லம் வயோதிபர் இல்லம் போன்றவற்றுக்கு விசேட உணவும், சிறு வாழ்வாதாரம், நீர் வசதி அனர்த்த நிவாரணம் இவ்வாறு எம்மால் முடிந்தவற்றை செய்து வருகின்றோம்.
இத்தனைக்கும் பல சவால்களுடன்தான் எமது அமைப்பு கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு மாதமும் ஆசியர்களுக்குரிய ஊதியம்,பண்ணையில் வேலை செய்பவற்குரிய ஊதியம், எமது மகளிர் கிராமிய முற்போக்கு ஒன்றியத்தின் உடனடி தேவைகள், இவையாவும் எமது அங்கத்தவர் நிதியிலும் மற்றும் இலவச மாலை நேரக்கல்வி நிலையங்களை பொறுப்பெடுத்தவர்களின் உறவுகளின் நிதியில் இருந்து வழங்கி வருகின்றோம் . அத்துடன் எமது நிறுவனம் பதிவு செய்யப்பட்டதால் Steuerberater (வருமான வரி ஒழுங்கு செய்வதற்கு) வருடாந்த கொடுப்பனவு 900-1000 யூரோ முடிகின்றது இவ்வாறு பல செலவுகள் எமது நிறுவனத்துக்கு இருக்கிறது. 1,யூரோ எமது நிறுவனத்தின் கணக்குக்கு வந்தாலும் அந்த நிதிக்கு என்ன நடந்தது என்று சுங்கத் பகுதிக்கு கணக்கு காட்டவேண்டும் அந்த வகையில்
கடந்த 25,08 2024 அன்று திரு பாலகிருஷ்ணன் அருணன் அவர்களின் திருமண நிகழ்வில் உதவும் இதயங்கள் நிறுவனம் உணவு பரிமாறுவதற்கு உதவி வழங்கியிருந்தோம் அவர்கள் எமக்கு 500 யூரோ வழங்கியிருந்தார்கள் அந்தநிதியில் 3 நபருக்கு ஊதியம் வழங்கியதுடன் மற்றும் போக்குவரத்து செலவு உட்பட 250 யூரோ முடிந்தது. மிகுதி 250 யூரோ உதவும் இதயங்கள் நிறுவனத்தின் நிர்வாக செலவுக்கு பயன் படுத்தவுள்ளோம். அந்த வகையில் திரு திருமதி அருணன் அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.
உதவும் இதயங்கள் நிறுவனம்

Leave A Reply