20.11.2023
கார்த்திகை மாதத்தின் புதல்வர்களின் 3 பெற்றோர்களுக்கு உதவி வழங்கப்பட்டது.
உதவி வழங்கியவர்கள்:பாட்பிரிட்டிக்சால் கயில்புறோன் யேர்மனி திரு பாலகிருஷ்ணன் திரு யோகநாதன் திரு குகனேசன்,மற்றும் பேர் குறிப்பிட விரும்பாத சுவிஸ் நண்பர்.
உதவித்தொகை: 240,000
உதவியின் நோக்கம்:சிறு வாழ்வாதாரம்.
1.திருமதி கதிர்காமத்தம்பி கலைவாணி (வீரகாவியம் வேலுப்பிள்ளை மகேந்திரன்) இவருக்கு 70,000 ரூபாயும்
2.செல்லையா செல்வமணி (வீரகாவியம் புவனேஸ்வரன்,சசிகலா) அவர்களுக்கு 100,000 ரூபாயும்
3.அழகையா சிவனேஸ்வரி (வீரகாவியம் ராமலிங்கம் தங்கராஜா ) அவர்களுக்கு 70,000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவியை வழங்கிய பாட்பிரிட்டிக்சால் கயில்புறோன் நண்பர்களுக்கும், சுவிஸ் வாழ் நண்பருக்கும் மனமார்ந்த நன்றிகள். இவர்கள் எமது தாயக உறவுகளுக்கு பலவிதமான உதவிகளை வழங்கி வருகின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த வகையில் உறவுகள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த எமது உறுப்பினர்களுக்கும் நன்றி.