HelpingHeartsTamil

23.11.2023
இன்றயதினம் 3 ம் 4 ம் கட்டமாக கார்த்திகை மாதத்தின் புதல்வர்களின் 3 பெற்றோர்களுக்கு உதவி வழங்கியுள்ளோம்.
உதவி வழங்கியவர்கள்: தமிழர் கலாச்சார வட்டம் பாட்பிரிட்டிக்சால் யேர்மெனி
மாங்குளத்தில் 2 குடும்பம்
தென்னியன்குளம் கிளிநொச்சி 1 குடும்பம்
உதவித்தொகை: 300,000,00
உதவி பெற்றவர்கள்:திருமதி மேரி யெசிந்தா (கணவன் வீரகாவியம்)தச்சடம்பன் மாங்குளம் 100.000,00 ரூபாயும், திருமதி யோகேஸ்வரன் யேக்குமாரி (கணவன் வீரகாவியம்) அம்பலவீதி ஒலுமடு 100.000,00 ரூபாய் திரு ராமநாதன் நடராசா வன்னேரிக்குளம் கிளிநொச்சி (மகன் வீரகாவியம் ) கிளிநொச்சி அவர்களுக்கும் 100.000,00 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது. இவர்கள் சிறு தொழில் செய்வதற்கு இந்த நிதியினை பயன் படுத்துவோம் என்று கூறியுள்ளார்கள்.
இந்த உதவியை வழங்கிய தமிழர் கலாச்சார வட்டம் பாட்பிரிட்டிக்சால் கயில்புறோன் யேர்மனி உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தமிழர் கலாச்சார வட்டம் பாட்பிரிட்டிக்சால் யேர்மெனி அமைப்பு கடந்த 20 வருடங்களாக பலவிதமான உதவிகளை எம் தாயக உறவுகளுக்கு வழங்கி வருகின்றார்கள். தொடர்ந்தும் எம் உறவுகளுக்கு இவர்களின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.அந்த வகையில் உறவுகள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த எமது உறுப்பினர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம்.

Leave A Reply