இனிய இரண்டாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதினி குட்டி!
அன்பான உறவுகளே!
உதவித்தொகை: 2 லட்சம்
நிதி உதவி வழங்கியவர்:திரு திருமதி மணிமாறன் மதுரிகா எமது அமைப்பின் பொருளாளர் (சரஸ் சேவை நிறுவனத்தின் உரிமையாளர் Germany)
ஆதினியின் பிறந்த நாளினை 20.05.2023 அன்று தனது இல்லத்தில் உறவினர்களுடன் கொண்டாடியிருந்தார் இந்த மகிழ்வான நாளில் தாயக மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன்
மணிமாறன் ஆதினி அவர்களின் இரண்டாவது பிறந்த நாளினை பின் தங்கிய ஒலுமடு மாங்குளம் என்னும் கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 14 வது இலவச மாலை நேரக்கல்வி நிலையம் ஒன்றினை ஆரம்பித்து வைத்துளார்கள் .
“கல்வியே எமது சிறார்களின் மூலதனம்” ஆகவே இந்த நல் நாளில் கல்வி நிலையத்தினை ஆரம்பிப்பதற்கு நிதி உதவி இரண்டு லட்சம் வழங்கிய திரு திருமதி மணிமாறன் மதுரிகா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அத்துடன் 18.05.2023 ஆதினிக்குட்டியின் பிறந்தநாள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு இடஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக தனது மகளின் பிறந்த நாளினை தவித்திருந்தார் அந்த வகையில் மணிமாறன் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் ஆதினிக்குட்டி சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ்க என வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதினி குட்டி அத்துடன் இந் நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கும் இந்த ஏற்பாட்டினை செய்து கொண்டிருக்கும் எமது உறுப்பினர் திரு சஜீவன் சண்முகலிங்கம் அவர்களுக்கும் ஒலுமடு மாகாவித்தியலய ஆதிபர் கேதிபன்,ஒலுமடு விளையாட்டுகழக தலைவர் பிரதாப் ஆகியொர் பெயர்பலகை திறந்துவைத்துள்ளார்கள் அவர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள நிறுவனம் யேர்மெனி