HelpingHeartsTamil

10வது உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலைநேரக் கல்வி நிலையம்.
“கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்”
பளை பச்சிலைப் பள்ளி பிரதேசத்தில் வண்ணாங்கேணிக் கிராமத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு
உதவும் இதயங்கள் நிறுவனம் (யேர்மனி) மாலைநேர இலவசக் கல்வி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இயக்குநர் திரு மயில்வாகனம் சிறிரஞ்சன் நேரடியாக சென்று கலந்துகொண்டு கல்வி நிலையத்தினை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில், உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் திரு மயில்வாகனம் சிறிரஞ்சன் மற்றும் இலங்கைக்கான உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உப தலைவர் திரு ச.சஜீவன், சிறப்பு விருந்தினராக வவுனியூர் ரஜீவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துருந்தார் மற்றும் கிராம சேவையாளர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் கிராம மட்ட அமைப்பினர் மாணவர்கள் பெற்றோர்கள், கிராம வாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் அவர்கள் அணைவருக்கும் நன்றி.
இந்த நிகழ்விற்கு நிதி உதவியினை வளங்கிய எமது உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கெள்கின்றோம்.
அத்துடன் மேலும் கல்வி நிலைய வளாகத்தில் 30 பயன் தரும் தென்னங்கன்றுகளும் நாட்டப்பட்டது.
டென் மார்க் மார்க்கண்டு ஜயா அவர்களின் பிறந்த நாள் பரிசாக மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள் வளங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.
அவர்களுக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Leave A Reply