உதவி வழங்கியவர்கள்:மார்க்கண்டு குடும்பம் யெர்மெனி
உதவி பெற்றவர்:ப.காளிப்பிள்ளை(மாவீரர் குடும்பம்)கைவேலி
உதவித்தொகை:25.000,00
உதவித் திட்டம்:மாணவர்களின் மாதாந்த கல்விக்கான உதவி.
எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான உறவுகளே!போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எமது மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஊக்குவிக்க வேண்டியது எமது கடமை அந்த வகையில் திரு. மார்க்கண்டு குடும்பத்தினரின் தொடர்ச்சியான பங்களிப்பில் பெண்தலைமைத்துவம் கொண்ட குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய எமது உறுப்பினர்
செல்வி யோசனா அவர்களுக்கும் இந்த உதவியை வழங்கிய யெர்மெனி யில் வாழும் திரு. திருமதி. மார்க்கண்டு குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் “உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி”

