30.01.2019 உதவும் இதயங்களின் மனிதநேயப்பணி ஊடாக யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்(அம்பலத்தாச்சி) அவர்களின் 76 வது பிறந்த நாள் நினைவாக 49 பிள்ளைகளுக்கு 54,000.00 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் (பாதணி ,புத்தகப்பை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது இதற்கான நிதியினை அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் மகன் திரு மணிவண்ணன் அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து வழங்கியிருந்தார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்(அம்பலத்தாச்சி) அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதுடன் இவ் உலகிற்கு நல்ல பண்புள்ள பிள்ளைகளை கொடுத்ததற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.இன்று பெற்றோரை உயிருடன் இருக்கும் போதே உதவிகள் செய்யத்தயங்கும் போது அமரராகிய தந்தையாரின் நினைவாக வசதியற்ற பிள்ளைகளுக்கு உதவ நினைக்கும் இவர்களை வாழ்த்தியே ஆகவேண்டும்.நன்றி திரு ந.மணிவண்ணன்! இவ் உதவிதனை செல்வன் கிசோபன் செல்வன் சஜீவன் நேரடியாகச் சென்று வழங்கியிருந்தனர்.மற்றும் கிராம சேவையாளர் மாற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“உதவும் இதயங்கள் நிறுவனம்” germany




































