எம்மைப்பற்றி
நாங்கள் யார்? (verlinken mit Wer Wir sind? )
இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் (தாயகத்தில்) கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த கொடும் போரும் அதன் உச்சமாக நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரவலமும் வரலாற்றில் என்றுமே தமிழ்த் தேசிய இனம் சந்திக்காதவை.
வரலாற்று பேரழிவின் துன்பச் சுமைக்குள் சிக்கித் தவிக்கும் எங்கள் அன்பான தாயக உறவுகளுக்கு உதவும் முகமாக நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஜெர்மன் நாட்டின் சட்டவரைவுக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளித்து தனக்கென நேர்த்தியாக யாப்பு விதிமுறைகளை உருவாக்கி பதிவு செய்து எமது நடைமுறைகளை செயல் படுத்தி வருகின்றோம்.
“உதவும் இதயங்கள் “என்ற பெயரில் 2012 பதிவினை மேற்கொண்டுள்ளோம்”. உளப்பூர்வமான உதவும் விருப்புடன் இணைந்த நண்பர்களில் தெரிவு செயப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிர்வாகக் கட்டமைப்பினையும் அந்த நிர்வாகக் கட்டமைப்பின் எதிர்பார்ப்புக்களை இயன்றவரை ஈடுசெயக்கூடிய உதவும் இதயங்களை இணைத்து “உதவும் இதயங்கள்„ Helping Hearts e.V VR 552 Amtsgericht Spaiishingen அமைப்பானது தொடர்ந்து எம் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் ஒழுக்கத்துடன் வெளிப்படையாகவும் உறுதியாகவும் திட்டமிட்டு செயல்படுகின்றோம் .
எமது சேவைகள் / செயல்த் திட்டங்கள்? (verlinken mit Was ist unsere Mission und Vision?)
(இலங்கை) தாயகத்தில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் போரினால் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்.போரினால் அதிகளவு பாதிக்கப்பட்டு அங்க உறுப்புக்களை இழந்தவர்களுக்கும்,போரினால் கணவரை இழந்து வறுமையில் வாழும் உறவுகளுக்கும்,போரினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி,மற்றும் வறுமையில் வாழும் உறவுகளுக்கும் முன்னுரிமைப் படுத்தி பாதிக்கப் பட்டவர்களை சரியான முறையில் ஆராய்ந்து அவர்களுக்கு உதவி வருகின்றோம்.
தொடர்ச்சியான உதவி:
- 1.) 57 பிள்ளைகளின் தொடர்ச்சியான மாலை நேரக்கல்வி. 2.) தாய் தந்தையை இழந்த உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு. 3.)தாய் தந்தையை இழந்தோர் எம்மிடம் உதவி கேட்க்கும் பட்ஷத்தில் உதவுதல் பாடசாலை உபகரணம் மிதி வண்டி,உடை போன்றவை வழங்கப்படுகின்றது. 4.)பிள்ளைகளை இழந்த பெற்றோர்களுக்கு தொழில் வாய்ப்பு அங்காடி (கடை) பால் மாடு ,கோழி,ஆடு வளர்த்தல் விவசாயம் செய்ய ஊக்கிவித்தல். 5.) தண்ணீர் வசதி இல்லாதவர்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தல். 6.)வறண்ட பிரதேசங்களில் வீதியோர மரங்கள் நடுதல். 7.)கிராமம் தோறும் மகளிர் அமைப்பை உருவாக்கி சிறு நிதி வழங்கி இந்த நிதியில் இருந்து இந்தக் குழு சுழற்சி முறை கடன் திட்டத்தை ஆரம்பிக்கும்.அத்துடன் எமது திட்டத்துக்கு அமைய கிராமங்களில் நடக்கும் தற்கொலை சிறுவர் துஸ் பிரயோகங்கள் எதிராக விழிப்புணர்வு செய்தல் , பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு உதவுதல்,சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளுதல் அல்லது உதவுதல் ,கிராமத்தில் விழிப்புணர்வு போன்ற பல விடயங்களை இவ் குழுக்கள் ஊடாக முன்னகர்த்தவுள்ளோம். 8.) சிறுவர் இல்லங்களுக்கான உதவி
எமது எதிர் காலத்திட்டம்? (verlinken mit Was ist unsere Mission und Vision?)
- உதவும் இதயங்கள் நிறுவனம் தானாக சிறு கைத்தொழில் உற்பத்திகளை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். விவசாயப் பண்ணை கால்நடைப் பண்ணை ,தையல் வகுப்புக்கள் ஆரம்பித்து திறமை உள்ளவர்களை தையல் வேலை கொடுத்து ஊக்கிவிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.முக்கியமாக பல மகளிர் அணியை கிராமம் தோறும் உருவாக்கி அவர்களுடாக பல வேலைத்திட்டங்களை முன்நகர்த்தவுள்ளோம்.
எமது கிளைகள்? (verlinken mit Wo sind unsere Vereinssitze)
இலங்கை நாட்டின் சட்டவரைவுக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளித்து பதிவினை மேற்கொண்டு உதவும் இதயங்கள் பவுண்டேசன் ஜெர்மனி பதிவு இலக்கம் ஜி எ 3484 என்ற பெயரில் இயங்கி வருகின்றோம். பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக இனம் கண்டு உண்மையில் பாதிக்கப்பட்டவரா என்று ஆராய்ந்து உதவி வருகின்றோம்.
மேலும் எமது கிளைகளை ஐரோப்பிய நாடுகளிலும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் அந்த வகையில் சுவிஸ் நாட்டில் 24.02.2018 ல் சுவிஸ் நாட்டின் சட்டங்களுக்கு அமைய எமது நிறுவனத்தை ஆரம்பித்து தாயக உறவுகளுக்கு உதவி வருகின்றோம்.தாயகத்தில் கிளிநொச்சியில் எமது நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.