HelpingHeartsTamil

உதவும் இதயங்கள் நிறுவனத்தினுடாக Nürnberg சிறி சித்திவிநாயகர் ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் 2 ம் கட்டமாக கெற்பேலி 332 கிராம அலுவலர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு கிராம அலுவலர் திரு க.தனேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் Nürnberg சிறி சித்திவிநாயகர் ஆலயத்தின் தலைவர் திரு செ .மனோகரலிங்கம் கலந்து கொண்டு உலர் உணவுப்பொதிகள் வழங்கினார்.அந்த வகையில் கோவில் நிர்வாகக் குழுவினருக்கும் பக்தர்களுக்கும் நன்றி. கெற்பேலி சூத்திரர் குளத்திற்கு அருகாமையில் வீடுகளிற்குள் வெள்ளம் புகுந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களிற்கு அத்தியாவசிய உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.இவ் நிகழ்வில் சாவகச்சேரி உப தவிசாளர் செ மயூரன் ,உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயற்பா ட்டாளர் செல்வன் கிசோபன்,வே.தனுசன் ஆகியோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் நன்றிகள் ,உதவும் இதயங்கள் நிறுவனம்.Germany

Leave A Reply