உதவி வழங்கிய இடம்: புதிய சின்னக்குளம் வவுனியா
உதவி வழங்கியவர்கள்:தமிழர் நட்சத்திர விளையாட்டுக் கழகம் கைல்புறோன் யெர்மெனி
இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புதிய சின்னக்குளம் வவுனியா என்ற பின்தங்கிய கிராமத்தில் 40 குடும்ப உறவுகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கியுள்ளார்கள். யெர்மெனியில் பிறந்து வளந்தவர்கள் இவ்வாறு உதவி செய்வதென்பது மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது. (புலத்தில் வாழும் சிலருக்கு முன்னுதாரணமாகவும் எடுத்துக்காட்டாக உள்ளது ) தங்களுடைய தாய் நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டுவிட்டது என்று அறிந்தவுடன் இளையவர்கள் தாங்களாகவே முன்வந்து நண்பர்கள் ஊடாக நிதியினை சேர்த்து எமக்கு அனுப்பியிருந்தார்கள். அந்தவகையில் அவர்களுக்கு தாயக உறவுகள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும் நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

Leave A Reply