தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குமாறு தமிழர் கலாச்சார வட்டம் பாட்பிரிட்டிக்சால் கயில்புறோன் யேர்மனி
1500 யூரோ வழங்கியிருந்தார்கள் அவர்கள் வழங்கிய நிதியில் இருந்து 3ம் கட்டமாக முரசுமோட்டை ஊரியான் என்னும் கிராமத்தில் 56 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. நேற்றயதினம்
புதிய கிராமம் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு 50 பொதிகள்
2.விசுவமடு புன்னைநீராவியடி 50 பொதிகள்
மொத்தமாக 156 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கியிருந்தோம்.
தமிழர் கலாச்சார வட்டம் பாட்பிரிட்டிக்சால் கயில்புறோன் யேர்மனி அமைப்பு எப்பவுமே எமது மக்களுக்கு உதவுவதில் முன்னிலையில் உள்ளார்கள். அந்தவகையில் தமிழர் கலாச்சார வட்டம் பாட்பிரிட்டிக்சால் கயில்புறோன் யேர்மனி உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்
மேலும் தமிழர் கலாச்சார வட்டம் பாட்பிரிட்டிக்சால் கயில்புறோன் யேர்மனி அமைப்பு இரண்டு மாதத்துக்குள் 1 மில்லியன் ரூபாய்க்கு மேல் தாயக உறவுகளுக்கு எம்மூடாக மட்டும் உதவிகள் வழங்கியுள்ளார்கள்.
இவர்களுடைய சமூக சேவை என்பது யாரையும் துன்புறுத்தாமல் தாங்களாகவே குறிப்பிட்ட சிலர் மற்றும் நிர்வாகம் ஒன்றிணைந்து பாட்பிரிட்டிக்சால் கயில்புறோன் நகரில் வருடத்தில் ஒரு முறை நடைபெறும் நகர விழாவில் தாயக உணவுகள் தயார் செய்து அதனை விற்பனை செய்து வரும் லாபத்தில் இந்த உதவிகளை வருடம் தோறும் வழங்கி வருகின்றார்கள்.தாயகத்தில் குறிப்பிடத்தக்க பல பணிகளை கடந்த 20 வருடங்களுக்கு மேல் செய்து வருகின்றார்கள் தாயக அமைப்புகள் ஊடாக! அந்த வகையில் தமிழர் கலாச்சார வட்ட நிர்வாக உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
உறவுகள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்பாகவும்.