“கண்காணிப்பும் கலந்துரையாடலும்”
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் சிறிவள்ளிபுரம் அம்பாறை என்னும் எல்லைப்புறக்கிராமத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்!! கடந்த இரண்டு வருடங்களாக மாலை நேரக்கல்வி நிலையம் சிறிவள்ளிபுரம் அம்பாறை என்னும் கிராமத்தில் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றது இங்கு வாழும் பெரும்பாலான மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் படிக்க வேண்டும் என்ற விருப்பம்மில்லாத நிலையைக் காணக்கூடியதாக உள்ளதால் பெற்றோரை வரவழைத்து பிள்ளைகளை கல்விகற்க அனுப்புமாறு கேட்டிருந்தோம்.உண்மையில் இங்கு இவர்களின் நிலை கவலைக்குரியதாகத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்கள் குட்டையில் மின் பிடிப்பதும்,வேட்டையாடுவதும் பிச்சை எடுப்பதும்,விறகு வெட்டி விற்று வாழும் சமுகமாகத்தான் இருக்கின்றார்கள். இவர்களை எப்படியாவது கல்வி சமூகத்துக்குள் கொண்டு வந்து விடலாம் என்கின்ற ஆசையுடன் இவர்களுடன் இரண்டு வருடங்களாக போராடுகின்றோம்.தொடர் போராட்டமாகத்தான் இருக்கின்றது காரணம் 10 நாட்கள் படிக்க வருவார்கள் பிறகு காணக்கிடைக்காது தங்கள் தொழிலுக்கு பிள்ளைகளையும் கூட்டிக் சென்று விடுவார்கள். நல்ல கெட்டிக்காரப்பிள்ளைகள் ஆனால் அவர்களுக்கு கல்வியின் பெறுமதி தெரியாமல் இருக்கின்றார்கள்!அவர்களுடன் கதைத்து 6 மாதம் காலக்கெடு கொடுத்திருக்கின்றோம். சரியானமுறையில் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பாவிடில் எமது மாலை நேரக்கல்வி நிலையத்தினை வேறு இடத்துக்கு மாற்றி விடுவோம் என்று எச்சரிக்கை செய்துள்ளோம்.
“உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மனி” (Helping Hearts Foundation Germany) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpngheartstamil.com Te:00491772061431
Bank:Helping Hearts E.V Germany
IBAN:DE07643500700008559182
BIC:SOLADES1TUT

