கண்ணீர் அஞ்சலி
கமலாதேவி தெய்வேந்திரம் யாழ்ப்பாணம் சுன்னாகம் அவர்களின் அன்பு மகளும் ஜெராஜ் பிரசாந்தன் அவர்களின் அன்புமனைவி அமரர் பிரசாந்தன் டிலிசியா சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் அவர்கள் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் எம்மோடு இணைந்து தாயக உறவுகளுக்கு பலவழிகளில் உதவி வழங்கிவந்த அமரர் பிரசாந்தன் டிலிசியா அவர்கள் தனது நலன் வேண்டி சிறு உதவி வழங்கியிருந்தார் தனக்கு
தலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தனது சத்திரசிகிச்சை வெற்றி பெற வேண்டி சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு உணவுவழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய விபுலானந்த சிறுவர் இல்லத்திற்கு ஒருநாள் விசேட உணவு வழங்கப்பட்டது.சிறுவர்கள் இறைவனை மன்றாடி கேட்டிருந்தார்கள்
இறைவன் அமரர் பிரசாந்தன் டிலிசியா அவர்களை காப்பாற்ற வில்லை கலங்கி நிற்கின்றோம்!!!!!!! நல்லவர்கள் இந்த உலகில் வாழமுடியாது என்பதற்கு இவர்களின் இழப்பு நல்ல உதாரணம்!
அமரர் பிரசாந்தன் டிலிசியா அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி ,சுவிஸ்,லண்டன்