உதவி வழங்கியவர்:திரு திருமதி பத்மராசா அவுஸ்பூர்க் யெர்மெனி
உதவி பெற்றவர்:இ.ஜெனிற்றா
இடம்:ஒலுமடு மாங்குளம்
உதவித் தொகை 24500,00
15.08.2021 அன்று செல்வன் அஸ்வின் பத்மராசா அவர்களின் 16 வது பிறந்தநாள் இந்த நல் நாளில் பெற்றோரை இழந்து உறவினருடன் வாழும் இ.ஜெனிற்றா இவருக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி பத்மராசா அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் செல்வன் அஸ்வின் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்….. அத்துடன் எமது மூத்த உறுப்பினர் திரு சிவகுமார் அண்ணா அவர்களுக்கும் மற்றும்
இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய எமது உறுப்பினர்கள் திரு சஜிவன் அவர்களுக்கும் நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி

