வீட்டுத் தோட்டம் மேற் பார்வையிடல் மற்றும் பொதுக் கூட்டம்.
கிராம சேவகர் திருமதி ஜெயதரன் விக்னேஸ்வரி தலைமையில் எமது பொன்நகர் மகளிர் அணியினரின் வீட்டுதோட்டம் இன்று பார்வையிடப்பட்டது. எப்போதும் நாம் நினைவில் வைத்திருப்பது “விதைத்துக்கொண்டே இரு!!! முளைத்தால் மரம் இல்லையெனில் நிலத்திற்கு உரம்” ஆகையால் நல்லவற்றை செய்வோம் எம் மக்களுக்கு பயனுள்ள விடையங்களை நாம் தொடர்ந்து செய்வோம் அத்துடன் எம் மக்களை கையேந்தி நிற்கும் பழக்கத்தில் இருந்து எவ்வாறு நிறுத்தலாம் என்று சிந்திக்கின்றோம்!!!!
புதிய ஆண்டில்!
அன்பான உறவுகளே! எம் அணியினர் செய்து கொண்டு இருக்கும் வீட்டுத் தோட்டம் மிக அழகாக இருக்கின்றது அவர்களுக்கு எமது
வாழ்த்துக்கள்
! நீங்களும் வாழ்த்துவீர்கள் என்று நம்புகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி