HelpingHeartsTamil

“தமிழ் மன்றம் பிறைபேர்க் 4 ம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு ” உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாக அனர்தத்தாலும் போரினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட மு/மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்தவாரம் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே இவர்களில் தவறவிடப்பட்ட மிகுதி 40 மாணவர்களுக்கும் இவ் உதவி வழங்கப்பட்டது.
அந்த வகையில் தமிழ் மன்றம் பிறைபேர்க் அங்கத்தவர்கள் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் தாயக உறவுகள் சார்பாகவும் எமது நிர்வாகம் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் மனித நேயப் பணிபுரியும் தமிழ் மன்றம் பிறைபேர்க் நிர்வாகக்குழுவினரையும் மக்களையும் மனதார வாழ்த்துகின்றோம்.இவ் நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து அன்புள்ங்களுக்கும் நன்றிகள்.
“உதவும் இதயங்கள் நிறுவனம்” Germany

Leave A Reply