“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். 19.01.2019
இன்று திருமண பந்தத்தில் இணையும் செல்வன் நிசாந்தன் செல்வி துவாரகா அவர்கள் திரு திருமதியாகும் இன்னாளில் பெண்கள் தலைமைத்துவம் கொண்ட செல்வன் வி .கிருஷன் உதயநகர் கிழக்கு கிளிநொச்சி ,தாய் தந்தை இல்லாமல் உறவினருடன் வாழும் செல்வன் ச .ரவிராஜ் பாரதிபுரம் கிளிநொச்சி இருவருக்கும் மிதி வண்டியும் 5 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி இவ் மாணவர்களிடம் இருந்து ஆசிகள் பெற்றுள்ளார்கள். அத்துடன் இளங்கோபுரம் இளந்தளிர் இலவச கல்வி நிலையம் 35 மாணவர்கள் (விசுவமடு) இவர்களுக்கு மதியஉணவு வழங்கி இவர்களிடமும் ஆசிகள் பெற்றுள்ளார்கள். நிசாந்தன் துவாரகா தம்பதியினரை 16 வகைச் செல்வங்களும் பெற்ரு நீடூழி காலம் வாழ்க என வாழ்த்துகின்றோம் ” உதவும் இதயங்கள் நிறுவனம்” யெர்மெனி

Leave A Reply