உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மனித நேயப் பணியூடாகப் பாதிக்கப்பட்ட இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு மாந்துவில் மல்லிகைத்தீவு கிராமங்களைச் சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் (உலருணவுப் பொதிகள்) வழங்கப்பட்டது. இதற்கான அனுசரணை வழங்கியவர்கள் இரண்டாம் கட்டமாக சிறி சிங்கன் சித்தி விநாயகர் ஆலயம் Germany .புது வருடதினத்தன்று மதிய பூசையில் கலந்து கொண்ட பக்தர்கள் அர்ச்சனை செய்து வந்த முழுப்பணமும் 755.00யூரோவும் 60,00 சுவிஸ் franken இந்த தொகையை பக்தர்கள் முன்னிலையில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் நிறுவனர் திரு ம.சிறிரஞ்சன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.இவ் நிதியில் இருந்து 29.12.2018 திருமுருகண்டி மக்களுக்கும் 07.01.2019 50 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. அந்தவகையில் இவ் உதவியை வழங்கிய சிறி சிங்கன் சித்தி விநாயகர் ஆலயம் Germany பக்தர்களுக்கும் நிர்வாகத்தினருக்கு தாயக உறவுகள் சார்பாகவும் உதவும் இதயங்கள் நிறுவனம் சார்வகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் தாயக்கத்தில் இவ் கொடுப்பனவுக்கு சதுர உதவி செய்த எமது உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அமைப்பினருக்கும் மதிப்புக்குரிய திரு அம்பிகைபாலன் அண்ணாவுக்கும் திரு சிவராசா அண்ணாவுக்கும் நன்றிகள் உதவும் இதயங்கள் நிறுவனம் Germany

 

Leave A Reply