திரு திருமதி சுகந்தன் தர்சினி தம்பதிகளின் செல்வப் புதல்வர்கள் ஆகிய லகஜன் குட்டி 2 வது பிறந்த நாளையும் தமீரா குட்டியின் 1வது பிறந்த நாளையும் இன்று சுவிஸ் நாட்டில் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் இன் நாளில் இந்து அன்பகம் வேப்பங்குளம் வவுனியா சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றுள்ளார்கள் அத்துடன் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய ஆசிகுளம் திருப்பழனி முருகன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது அந்த வகையில் லகஜன் குட்டி,தமீரா குட்டி இருவரையும் சகல இன்பங்களும் பெற்று உலகத்தார் போற்ற நீடூழிகாலம் வாழ வாழ்த்துகின்றோம். அத்துடன் இவ் உதவியை நேரடியாகச் சென்று வழங்கிய எமது செயற்பாட்டாளர் கிசோபன்,பரணி அவர்களுக்கும் தங்களின் பிள்ளையின் பிறந்த நாள் நினைவாக இவ் உதவியை வழங்கிய திரு திருமதி சுகந்தன் தர்சினி தம்பதினருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“உதவும் இதயங்கள் நிறுவனம் “Germany